×

சிஏஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் பாக். ஆதரவு கோஷம் எழுப்ப அரசே ஆட்களை அனுப்புகிறது: உபி. முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

சம்பால்: ‘‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப அரசே ஆட்களை அனுப்புகிறது’’ என்று உத்தர பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் அஜிஸ் குரேஷி குற்றம் சாட்டியுள்ளார்.  மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த உபி. முன்னாள் ஆளுநர் அஜிஸ் குரேஷி கூறியதாவது: முஸ்லிம்களை பிரிக்கும் பாஜ, ஆர்எஸ்எஸ்.சின் சதித் திட்டமே குடியுரிமை திருத்தச் சட்டமாகும். நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இருக்கும் எம்பி.க்களின் எண்ணிகையை பயன்படுத்தி பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அரசியலமைப்பின் நற்பண்புகளை கொன்று புதைத்து இதனை சட்டமாக்கி உள்ளனர்.

இதனால் நாட்டிலுள்ள 20 கோடி முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் ஹிட்லரை பின்பற்றுபவர்கள் அமர்ந்து கொண்டு, சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட அவர்களுடைய ஆட்களை அனுப்புகின்றனர். அவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதாகவும், அது வன்முறை போன்றும் சித்தரிக்கப்படுகிறது. இது போலீசாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு வழி வகுக்கிறது. இவை அனைத்தும் திட்டமிட்டபடி மிக சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஹிட்லர் அமைத்ததைப் போல, மத்திய அரசும் தடுப்பு முகாம்களை அமைத்து வருகிறது. இவை அனைத்தும் நாட்டை பிளவுப் படுத்துவதற்காகவும், இந்து ராஷ்டியரித்தை உருவாக்கவும் செய்யப்படுகிறது என்று அவர் கூறினார்.

Tags : fight ,Pak ,CAA ,Government ,governor ,men ,Ub ,Pac , CAA Struggle, Pac. Support, Ub. Former Governor, indictment
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்