×

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கேரளாவில் பதுங்கல்? : இடைத்தரகர் வெளியிட்ட திடுக் தகவல்

தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில், இடைத்தரகர் வேதாச்சலத்திடம் தேனி சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், முக்கிய குற்றவாளியான முகமது ரஷீத்துக்கு கேரள அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் செல்வாக்கு இருப்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கை, தேனி சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கைதாகி ஜாமீனில் உள்ளனர். இடைத்தரகர் மனோகரன், மாணவர் பவித்ரன் ஆகியோர் மட்டும் சிறையில் உள்ளனர். இதில் மாணவர் பவித்ரனுக்கு நேற்று நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த 14ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த இடைத்தரகர் வேதாச்சலத்தை, தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் செய்தனர். இவரை, தேனி சிபிசிஐடி போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். தேனி நகர், சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில், எஸ்பி விஜயகுமார் தலைமையில் போலீசார் இடைத்தரகர் வேதாச்சலத்திடம் 4 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இதில் ‘நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடந்தது எப்படி? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கும், அரசு அதிகாரிகள் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்றும் வேதாச்சலம் கூறியதாக தெரிய வருகிறது. தொடர்ந்து நடந்த விசாரணையில், ‘நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட புரோக்கர் முகமது ரஷீத்துக்கு, கேரளாவில் அரசியல் கட்சியினர் மத்தியில் செல்வாக்கு இருப்பதாகவும், அவருக்கு பின்புலமாக அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் இருப்பதால் போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது. வேதாச்சலத்தின் தகவலின்பேரில் சிபிசிஐடி போலீசார், முகமது ரஷீத்தை பிடிக்க கேரளா செல்ல இருப்பதாகவும், போலீசார் பிடியில் அவர் சிக்கினால் இந்த வழக்கில் பெரிய தொழிலதிபர்கள், அரசியல் பெரும்புள்ளிகள் தொடர்பு குறித்து தெரியவரும்.

Tags : Kerala ,intermediary , Main culprit , case of NEET transporter, hiding in Kerala,Solid information released,intermediary
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...