×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

சென்னை: அமமுக நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை கிழக்கு மாவட்டம், அமமுக கட்சியின் அம்மா பேரவை வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.காதர்மீரான் தலைமையில், மாணவர் அணி மாவட்டச் செயலாளர் வி.பாலாஜி, அமைப்புசாரா மாவட்ட தலைவர் எஸ்.குமரகுரு, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் வி.கிருஷ்ணன்குமார், அம்மா பேரவை எழும்பூர் பகுதிச் செயலாளர் எம்.முத்து, திரு.வி.க.நகர் தொகுதி பகுதி துணைச் செயலாளர் எஸ்.பக்ருதீன், எழும்பூர் பகுதி இளைஞர் அணி இணைச் செயலாளர் ஒய்.யூனூஸ் மற்றும் என்.கணேஷ், எஸ்.சேக்ஒளி, இம்ரான்கான், முகமதசகூர், அலாவுதீன், ஷாஜகான்உசேன், சலீம், தமிழ், ரபீக், அண்ட்ரோஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் நேற்று திமுகவில் இணைந்தனர். அப்போது, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : executives ,AMC ,MK Stalin ,DMK , MK Stalin, AMC executives joined DMK
× RELATED கன்னியாகுமரி சென்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு