×

சாட்சிகள் வர தயக்கம் பத்திரப்பதிவுக்கு புகைப்படம், கைரேகை கட்டாயமில்லை

* பதிவுத்துறை ஐஜி அலுவலகம் திடீர் பல்டி
* மென்பொருளில் இருந்து நீக்கவும் முடிவு

சென்னை: பத்திரப்பதிவுக்கு சாட்சிகள் வர தயங்குவார்கள் என்பதால் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயமில்லை என்றும், சார்பதிவாளர்கள் சாட்சிகளின் புகைப்படம், கைரேகை அச்சிடாமல் தொடரலாம் என்றும் பதிவுத்துறை ஐஜி அலுவலகம் கூறியிருப்பது சார்பதிவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவின்போது இதுவரை சாட்சிகளிடம் புகைப்படம், ைகரேகை வாங்கியதில்லை. அவர்களிடம் இருந்து கையெழுத்து மட்டுமே பெறப்பட்டு வந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு இடைத்தரகர்கள் பத்திரப் பதிவுக்கு சாட்சியாக தாங்களே ஒரு சிலரை அழைத்து வருகின்றனர். அந்த நபர்களே சாட்சிகளாக பல பத்திரங்களுக்கு கையெழுத்து போடுகின்றனர். இந்த சாட்சிகளால் சில நேரங்களில் பத்திரப்பதிவில் மோசடி நடந்து வருவதாக புகார் எழுகிறது.

இதை தொடர்ந்து, பத்திரப்பதிவுக்கு சாட்சிகளின் புகைப்படம் மற்றும் கைரேகை பெறுவது நேற்று முதல் கட்டாயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு இடைத்தரகர்கள் ஒரே சாட்சிகளை அழைத்து வந்தால் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பத்திரப்பதிவு குறையும் என்று சார்பதிவாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் ெதரிவித்தனர். அதன்பேரில் பதிவுத்துறை ஐஜி அலுவலகம் வெளியிட அறிவிப்பில், ‘வழக்கறிஞரின் அதிகாரத்தை தவிர சாட்சிகளின் புகைப்படம் மற்றும் கைரேகையை பதிவு செய்ய நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.

இளநிலை உதவியாளர் திரையில் இருந்து சாட்சிகளின் புகைப்படம் மற்றும் கைரேகை அச்சிடாமல் மென்பொருள் நகரும். ஆனால், சார்பதிவாளர் திரையில் அது கேட்கிறது. சார்பதிவாளர் திரையில் சாட்சிகளின் புகைப்படம் மற்றும் துல்லியமாக அச்சிடாமல் மேலும் தொடரவும். சார்பதிவாளர் திரையில் இது கட்டாயமில்லை. இந்த பிரச்னை நாளை (இன்று) சரிசெய்யப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Reluctance to testify, not mandatory,photography and fingerprints
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...