×

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு விவகாரம் மோசடி செய்தது எப்படி என ஜெயகுமார், ஓம்காந்தன் நடித்து காட்டினர்

சென்னை: குரூப் 2ஏ தேர்வு மோசடியை செய்தது குறித்து 6 நாள் விசாரணையில் இடைத்தரகர் ஜெயகுமார், டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தன் ஆகியோர் நடித்து காட்டியதை சிபிசிஐடி போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். அதைதொடர்ந்து இருவரையும் வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4, குரூப்2ஏ, விஏஓ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி இதுவரை 47 நபர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குரூப் 2ஏ தேர்வில் நடந்த மோசடி தொடர்பாக இடைத்தரகர் ஜெயகுமார், ஓம்காந்தன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 6 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார்  மோசடியாக தேர்வு நடந்த மையங்களாக ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, விடைத்தாள் ஏற்றப்பட்ட வாகனத்தில் இருந்து எப்படி ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மைய கட்டுகள் எடுக்கப்பட்டது எப்படி, அதை ஓடும் காரில் திருத்தியது. மீண்டும் திருத்தப்பட்ட விடைத்தாள்களை மீண்டும் வாகனத்தில் வைத்தது எப்படி என்று இருவரும் நடித்து காட்டினர். அப்போது, விடைகளை குறித்து கொடுத்த ஆசிரியர் செல்வேந்திரன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த பிரபாகரன், கார்த்திகேயன், சம்பத் ஆகியோரும் உடன் இருந்தனர். அதை சிபிசிஐடி போலீசார் வீடியோவாக பதிவு ெசய்து கொண்டனர். 6 நாள் காவல் முடிந்து ஜெயகுமார் மற்றும் ஓம்காந்தனை சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நடுவர் ராஜ்குமார் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வரும் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைதொடர்ந்து இருவரையும் சிபிசிஐடி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே குரூப் 4 முறைகேட்டில் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்ட பிரபாகரன், கார்த்திகேயன், சம்பம் மற்றும் விடைகளை குறித்து கொடுத்த ஆசிரியர் செல்வேந்திரன் ஆகியோரையும் சிபிசிஐடி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பிரபாகரனை வரும் 28ம் தேதி வரையும், ஆசிரியர் செல்வேந்திரன், கார்த்திகேயன், சம்பத் ஆகியோரை வரும் 9ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார். அதன்படி 4 பேரையும் சிபிசிஐடி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Omkandan ,Jayakumar , Jayakumar and Omkanthan , Group 2A fraud scam
× RELATED ஜெயக்குமார் மரணத்தில் நிறைய...