×

வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் நடந்த வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியின் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். டெல்லி மஜ்பூரில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ரத்தன் உயிரிழந்தார்.


Tags : Ratan ,Arvind Kejriwal ,death ,Delhi ,Govt , Violence, Chief Guard, Delhi, Chief Minister Arvind Kejriwal
× RELATED டெல்லியில் சில நாட்களாக கொரோனா...