6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சித்தூர் முதலாவது மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குரும்பலகொட்டவில் உள்ள திருமண மண்டபத்தில் தனது பெற்றோருடன் உறவினர் திருமணத்திற்கு வந்த 6 வயது சிறுமியை கடந்த ஆண்டு நவம்பர் 7 ம் தேதி மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை சவாலாக எடுத்துக் கொண்ட மதனப்பள்ளி போலீசார் டிஎஸ்பி ரவி மனேகராச்சாரி  தலைமையில் போலீசார் சிறு பிள்ளையை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது,  

கொலை வழக்கு  மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மதனபள்ளி மண்டலம் பசினி கொண்டா கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் முகமது ரஃபியை நவம்பர் 16ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு  சித்தூரில் உள்ள முதலாவது மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் போலீசார் 21  சாட்சிகளை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அரசு தரப்பு வழக்கறிஞர் லோகநாதன் வாதிட்டார் .இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி இன்று குற்றவாளி முகமது ரபிக் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி வெங்கடஹரிநாத் தீர்ப்பு வழங்கினார்.

தண்டனை வழங்குவதற்கு முன்பு குற்றவாளி முகமது ரபி இந்த தவறு நான் செய்யவில்லை தனக்கு மனைவி மற்றும் வயதான பெற்றோர்கள் இருப்பதாகவும்  என்று மன்றாடினர். தீர்ப்பு குறித்து கேட்ட சிறுமியின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>