×

கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு: திடீரென பதவியை ராஜினாமா செய்த பிரதமர் மகாதீர்..மலேசிய அரசியலில் பரபரப்பு!

கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் மகாதீர் அந்நாட்டில் கூட்டணி தர்மத்தை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 94 வயது நிரம்பிய மகாதீர் மொஹமத், உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றவர். கடந்த, 2018ல் மலேசியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகமே இவரை பாராட்டியது. மலேசியன் யுனைட்டட் இண்டிஜினியஸ் கட்சியை சேர்ந்த மகாதீருக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி கிடைக்கவில்லை.

இவர் அந்நாட்டு இன்னொரு அரசியல் தலைவரான அன்வர் இப்ராஹிம் கட்சியான பீப்பிள் ஜஸ்டிஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தார். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டுக்குப் பிறகு, அன்வர் இப்ராஹிம் பிரதமர் பதவியை ஏற்பார் என, மகாதீர் முகம்மது குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இந்தியாவில் காஷ்மீர் விவகாரம், சிஏஏ உள்ளிட்டவை குறித்து மகாதீர் மூக்கை கருத்து தெரிவித்தார். இதையடுத்து, மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதியை இந்தியா நிறுத்தியது.

இதனால், மகாதீரை அன்வர் விமர்சித்தார். அதில் கோபமடைந்த மகாதீர், கடுமையான வார்த்தைகளில் அன்வரை விமர்சித்தார். இந்த நிலையில், நேற்று மகாதீர் கட்சியைச் சேர்ந்த சிலர், முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடந்தினர். அன்வர் கட்சியைச் சேர்ந்த சிலரும் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த, அன்வர் இப்ராஹிம், மகாதீர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் எங்களுக்குக் கொடுத்த சத்தியத்தை மீறிவிட்டார்.

ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் என்னிடம் பொறுப்பை கொடுப்பேன் எனக் கூறினார். ஆனால் மகாதீர் அதை செய்யவில்லை, எனத் தெரிவித்தார். இது மலேசியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அன்வர் புகார் தெரிவித்த சில மணி நேரங்களில், மகாதீர் மொஹமத் தனது பதவி விலகல் கடிதத்தை, அந்நாட்டு மன்னரிடம் அளித்துள்ளார். இதனால் அங்கு அன்வர் பிரதமர் ஆவாரா அல்லது அங்கு மீண்டும் தேர்தல் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. மலேசிய அரசியலில் இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Mahathir ,Malaysian , Malaysia, Prime Minister, Mahathir Mohamad, Resignation, Alliance
× RELATED மலேசியாவில் இருந்து தமிழக...