×

சிஏஏ, என்ஆர்சியால் பாதிப்பில்லை என தான் கூறிய கருத்து கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு: உத்தவ் தாக்கரே விளக்கம்

மும்பை: சிஏஏ, என்ஆர்சியால் பாதிப்பில்லை என தான் கூறிய கருத்து கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து எடுக்கப்பட்ட முடிவு தான் என உத்தவ் தாக்கரே விளக்கமளித்துள்ளார். மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக பாஜ.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற சிவசேனா, கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அதனுடன் இருந்த உறவை முறித்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. இக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வராக உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) திட்டங்களையும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு ஆதரவு தெரிவித்த உத்தவ் தாக்கரே, சிஏஏ. தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் பேசிய அவர், சிஏஏ மற்றும் என்ஆர்சி பற்றி யாரும் பயப்பட தேவையில்லை எனவும், அது பற்றி பிரதமருடன் ஆலோசித்து விட்டதாகவும் கூறினார். சிவசேனா இப்படி மாறி மாறி முடிவெடுப்பதால் கூட்டணி கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள உத்தவ் தாக்கரே, இந்த விவகாரத்தில் என்னுடைய நிலையை தெளிவுப்படுத்திவிட்டேன். கூட்டணி கட்சிகளுடனும் இது தொடர்பாக ஆலோசித்த பின்பே, முடிவை தெரிவித்தேன். மகாராஷ்டிராவில் இதனை அமல்படுத்துவதற்கு உள்ள சிக்கல்கள் குறித்து மூன்று கட்சிகளை சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் கலந்து ஆலோசிக்கப்போம், என்று கூறியுள்ளார்.



Tags : NRC ,CAA ,Uttav Thackeray ,Uddhav Thackeray , CAA, NRC, Uddhav Thackeray, Maharashtra
× RELATED சிஏஏ சட்டத்தை ரத்து செய்வோம் மோடியை...