×

குஜிலியம்பாறை பகுதியில் சீசனுக்கு அறிகுறி முருங்கை மரங்களில் பூத்துக் குலுங்கும் பூக்கள்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை பகுதியில் சீசனுக்காக முருங்கை மரங்களில் ஏப்ரல், மே மாதங்களில் முருங்கை சீசன் அறுவடைக்கு அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளது. குஜிலியம்பாறை, ஆர்.வெள்ளோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி முக்கிய வேளாண் தொழிலாகும். மிகுந்த வருவாய் தரும் பணப் பயிராகவும் உள்ளது. ஆர்.வெள்ளோடு பகுதி முருங்கை காய் இதன் சுவை மற்றும் காயின் திரட்சியின் காரணமாக தமிழகம் அல்லாது அண்டை மாநிலத்திலும் கூட பிரசித்தி பெற்றது. குறிப்பாக கூம்பூர், ஆர்.புதுக்கோட்டை, மல்லப்புரம், பல்லாநத்தம், ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், குஜிலியம்பாறை, ஆர்.கோம்பை, வடுகம்பாடி, உல்லியக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபுறங்களில் பல ஏக்கர் பரப்பளவில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. செடி முருங்கை, நாட்டு முருங்கை, கரும்பு முருங்கை என பயிரிட்டுள்ளனர்.

இதில் செடி முருங்கை மற்றும் கரும்பு முருங்கை சாகுபடியில் வரத்து அதிகமாக இருக்கும். தற்போது மார்ச், ஏப்ரல், மே மாத அறுவடைக்கு முருங்கை மரங்களில், முருங்கை சீசன் அறுவடைக்கு அதிக அளவில் பூ பூத்து குலுங்குகின்றது.இது குறித்து முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், ‘‘குஜிலியம்பாறை, ஆர்.வெள்ளோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் எங்களுக்கு முருங்கை சாகுபடி முக்கிய வேளாண் தொழிலாகவும், மிகுந்த வருவாய் தரும் பணப்பயிராகவும் உள்ளது. 2வது சீசனுக்கு வருகின்ற ஏப்ரல் அறுவடைக்கு முருங்கை மரத்தில் பூக்கள் அதிகம் பூத்துள்ளது. இதனால் முருங்கை அறுவடையும் அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது முருங்கை கிலோ ரூ.40 முதல் ரூ.60க்கு விலை போகிறது. ஏப்ரல் சீசனில் இன்னும் அதிக விலை கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்றனர்.

Tags : area ,Kujiliyambara , Flowers blooming , drumsticks, seasonal signs, Kujiliyambara area
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி