×

திருத்துறைப்பூண்டி அருகே அடிப்படை வசதியில்லாத உழவர் சந்தை: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக உழவர் சந்தை இயங்கி வருகிறது. இதில் நாட்டு காய்கறிகள் விற்பனை செய்ய 150க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேதாரண்யம் பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வந்து விற்று பலன் பெறுகின்றனர். ஆனால் உழவர் சந்தையில் சுற்றி செடிகொடிகள் காடுபோல படர்ந்து காணப்படுகிறது. சந்தையின் முன்பகுதியில் உழவர் சந்தை அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் கடந்த 30 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் பொதுமக்கள் காய்கறி வாங்க பொதுமக்கள் வருவார்கள்.

தற்போது சாலை இருட்டாக உள்ளதால் பகலிலும் இரவிலும் அலுவலகத்தில் மெழுகுவர்த்தி வைத்துக்கொண்டு அலுவலர்கள் வேலை செய்ய வேண்டி உள்ளது. இரவு நேர காவலர்கள் அலுவலகத்தில் பாம்பு, விஷ பூச்சிகளுக்கு மத்தியில் பயந்து கொண்டு காவல் பணியாற்றி வருகின்றனர். மேலும் குடிநீர் பைப்லைன் கொண்டு வந்து பல மாதம் ஆகிறது. உழவர் சந்தைக்கு குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இதனால் காய்கள் கடை விற்பனை செய்யும் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி படுகின்றனர்.

மேலும் சந்தையில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. உழவர் உந்தைக்கு குடிநீர் வழங்க குடிநீர் பைப் லையன் கொண்டு வந்து பல மாதம் தாயும் இணைப்பு வழங்கவில்லை. இந்த இடத்தில் உள்ள பைப்லையன் உடைந்து 3 நாள் காககுடிநீர் விணாக ஒடுகிறது. எனவே திருவாரூர் கலெக்டர் உடனே நடவடிக்கை எடுத்து உழவர் சந்தை பகுதிக்கு உடன் மின் இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Farmer Market ,Tiruchirapuram ,traders , Farmer Market , Tiruchirapuram, Basic traders , traders
× RELATED தேனி உழவர் சந்தை பகுதியில் திமுக...