சின்னாபின்னமாகும் சாதாரண குடும்பங்கள்: யுவராஜ், மனோன்மணியம் பல்கலை சைக்காலஜித்துறை தலைவர்

தற்போது மேலை நாடுகளில் உள்ள கலாச்சாரம் நம்நாட்டில் அப்படியே பின்பற்ற தொடங்க ஆரம்பித்து விட்டனர். அதுபோல, சில விஷயங்களில் முன்பெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போது அதன் தன்மைகள் குறைந்து கொண்டு  இருக்கிறது.

 தற்போது டிக் டாக் மட்டுமில்லை ஏகப்பட்ட அப்ளிகேஷன்கள் உள்ளது. . அது போன்று அப்ளிகேஷன்கள் மூலம் ஆண், பெண் என்றில்லாமல், எல்லா தரப்பினரும் பாதிக்கப்பட்டு, சமூகமே சீரழிந்து வருகிறது,  இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். டிக் டாக் மாதிரியான செயல்களில் இவர்களுக்கு சில நொடிகளில்  அங்கீகாரம் கிடைக்கிறது. எல்லோரும் நம்மை  கவனிக்கிறார்கள் என்கிற போது அதன் மீது அவர்களுக்கு நாட்டம் அதிகரிக்கிறது. அந்த நாட்டம் நாளடைவில், அவர்களுக்கு போதையாக மாறுகிறது. மேலும் லைக் மற்றும் அதை ஏற்றுக் கொள்வதினால் நிறைய பேருக்கு அதன் மீது ஈர்ப்பு  அதிகமாகி கொண்டே வருகிறது. பெரும்பாலானோர் அதன் விளைவுகள் தெரியாமல் மாட்டிக்கொள்கின்றனர். . இப்போது  தனிக்குடித்தனம் வந்து விட்டது. வீட்டில் பெரியவர்கள் இல்லை என்கிற போது பெற்றோர்களுக்கு பொறுப்பு அதிகமாகிறது. ஆனால் இருவரும் வேலைக்கு சென்றுவிடுவதால் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல்  போய்விடுகிறது. , சாப்பிட வைக்க வேண்டுமானால் கூட டிவி, ெசல்போன் போன்றவற்றை பார்க்க அனுமதிக்கின்றனர். அப்படி பார்க்கும்போது என்ன செய்கிறார்கள் என்பதே தெரியாமல் போய்விடுகிறது. மேலும் சமூகவலைதளத்திற்குள்  சென்று குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. அதனால் சிறுவயதிலேயே அதில் அனுபவம் பெற்று விடுகின்றனர். அதன்பிறகு வளர்ந்த காலத்தில் அதன் தீவிரம் தெரியாமல் போய்விடுகிறது.

 டிக்டாக் செயலியில் இளைஞர்கள் மட்டும் அல்ல, வயதானவர்களும் அதிகம் பேர் டிக் டாக் பண்ணுகின்றனர். அவர்கள் இதில் அதிக அளவு நாட்டம் கொள்ளும் போது,  இதுபோன்று செயலிக்குள் அடிமையாகி விடுகின்றனர். பெரியவர்கள்  இதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்றால் சுயகட்டுப்பாடு வேண்டும். அதாவது நம்முடைய அளவு இவ்வளவு தான் சமூகவலைதளமும் போதை தரக்கூடிய ஆல்கஹால் போன்று தான். எனவே நமக்கு அதன் ஆபத்து புரிய வேண்டும். அதில்  மூழ்கி விட்ட பல இளைஞர்கள், பெண்கள் தான் வாழ்க்கையை தொலைக்கின்றனர்.  மேலும் சமூகத்தில் நம்முடைய பொறுப்புணர்வு வேண்டும். ரொம்ப தீவிரமாக டிக் டாக்கில் இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும். செல்போனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 14  வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் தேவையில்லை. அப்படி அவர்கள் செல்போன் பயன்படுத்தினாலும் அதில் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். மேலும் அதிகமாக பாதிக்கப் பட்டவர்களுக்கு மனநல கவுன்சிலிங் தேவை. வீட்டில்  நிறைய பேருக்கு நேரடியாக அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனால் செல்போனில் அதிக அங்கீகாரம் கிடைக்கிறது.

 டிக்டாக்கில் பாதிக்கப்படும் பட்சத்தில் அதை சரி செய்ய வழியை தேட வேண்டும், ஆனால், அவ்வாறு செய்யாமல் உணர்ச்சி வேகத்தில் மனைவியை கொலை செய்து விடுகின்றனர். இதனால், சின்னாபின்னமாவது அவர்களது குடும்பம் தான்.  சாதா குடும்பங்கள் தான் பெரும்பாலும் டிக்டாக் மோகத்தால் சிதைகின்றன. எனவே, இது போன்று நிலைமை இருந்தால் கணவன் தனது மனைவியிடம் பொறுமையாக எடுத்துக்கூறி அவர்களது மனநிலையை மாற்ற வேண்டும். முடிந்தால்  பாதிப்புக்குள்ளாகும் ஆண்கள், பெண்களுக்கு கவுன்சலிங் கொடுத்தால் நிலைமை சரியாகும்.சமூகவலைதளத்திற்குள் சென்று குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. அதனால் சிறுவயதிலேயே அதில் அனுபவம் பெற்று  விடுகின்றனர். அதன்பிறகு வளர்ந்த காலத்தில் அதன் தீவிரம் தெரியாமல் போய்விடுகிறது.

Related Stories:

>