×

8 கோயில்களின் உட்கட்டமைப்பு பணிகளை ஒரே நிறுவனத்துக்கு 8 டெண்டர் விட முயற்சி

* சுற்றுலாத்துறையில் சர்ச்சை * ஆசிய வளர்ச்சி வங்கி எச்சரிக்கை

சென்னை: சுற்றுலாத்துறை சார்பில் 8 கோயில்களின் உட்கட்டமைப்பு பணிகளை ஒரே நிறுவனத்துக்கு 8 பணிகளை ஒப்படைக்க முயற்சி செய்த சம்பவம் அந்த துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் முக்கிய சுற்றுலா தலங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை மூலம் செய்து தரப்படுகிறது. குறிப்பாக, ஓய்வுக்கூடங்கள், கழிவறைகள், அணுகு  சாலைகள், உடை மாற்று அறைகள், வாகன நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, வழிகாட்டி பலகைகள் நிறுவுதல் போன்றவை சுற்றுலாத் தலங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அறநிலையத்துறை கட்டுபாட்டில்  உள்ள மதுரை அழகர் கோயில், திருச்சி மாவட்டம் வீரப்பூரில் பொன்னர் சங்கர் கோயில், பெரியகாண்டியம்மன் கோயில், சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் குமாரகிரி தண்டாயுதபானி கோயில், தஞ்சாவூர் மாவட்டம் திங்களூர்  கைலாசநாதர் கோயில், கும்பகோணம் திருநாகேஸ்வரம் கோயில், சுவேதரனீஸ்வரர் கோயில், கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயில், ஆலங்குடி அபத்சகாயேஸ்வரர் கோயில் ஆகிய கோயில்களில் ₹12 கோடி செலவில் குளங்களை  சீரமைப்பது கழிப்பிட வசதி, வழிகாட்டி பலகை உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிகளை சுற்றுலாத்துறை சார்பில் மேற்கொள்ள கடந்த நவம்பரில் டெண்டர் விடப்பட்டது. இதில்,  டெண்டர் விதிமுறையின் படி 6 பணிகளை ஒரே நிறுவனத்துக்கு தரக்கூடாது என்கிற விதி உள்ளது. ஆனால், சுற்றுலாத்துறை சார்பில் ஒரே நிறுவனத்துக்கு 6 இடங்களில் பணிகளை செய்ய சட்ட விரோதமாக சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள்  அனுமதி அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கடந்த நவம்பரில் டெண்டர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது வரை பணிகளை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒவர் கூறும் போது, சுற்றுலாத்துறையில் உள்ள உயர்அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு சுற்றுலாத்துறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியும் தற்போது ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு  செய்வது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளது. இதில், ஒரே நிறுவனத்துக்கு பணிகளை ஒப்படைக்க அந்த வங்கி தடை விதித்துள்ளது. இருப்பினும் அந்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்து அதன் உடன் ஒப்பந்தம் போட வேண்டும் என்பதற்காக பணிகளை தொடங்காமல் சுற்றுலாத்துறை  காத்திருக்கிறது. இந்த பணிகளை ஒப்படைக்க லட்சக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது. இதனாலேய பணிகள் தொடங்காமல் தாமதம் செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர், செயலாளர் தலையிட்டு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : company ,Temples Undertaking Tasks , 8 Infrastructure,temples,company,tender
× RELATED மன்னிப்பு கோரி நாளிதழ்களில்...