துபாய் டூட்டி பிரீ டென்னிஸ்: ஹாலெப் சாம்பியன்

துபாய்: துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவுடன் மோதிய ஹாலெப் 3-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடிய அவர் 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவிக்க, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த அந்த செட்டில் ஹாலெப் 7-6 (7-5) என போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். மிகவும் விறுப்பாக அமைந்து ரசிகர்களை மகிழ்வித்த இந்த போட்டி 2 மணி, 27 நிமிடத்துக்கு நடந்தது. ஹாலெப் வென்ற 20வது சாம்பியன் பட்டம் இது.

Related Stories:

>