அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு: கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை:அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் பணிபுரியும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை கட்டுபாட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் உள்ளது. திருவிழா காலங்கள் மட்டுமின்றி பூஜை நேரங்களில் மங்கள இசை இசைக்கப்படுவது வழக்கம். இதற்காக, நாதஸ்வரம், தவில், தாள இசைவாணர்கள்  உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊதியம் உயர்த்த கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை  ஆணையர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: முதுநிலை திருக்கோயில்களில் பணிபுரியும் நாதஸ்வரம் பணியாளர் தவிர பிற இசை பணியாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியமான 2550க்கு பதிலாக 3200 மாற்றியமைக்கப்பட்டது.

ஆனால், இந்த அரசாணையில் எந்த தேதி முதல்  திருத்திய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிற தெளிவுரை வழங்கக்கோரி பல்வேறு சார்நிலை அலுவலர்களிடம் இருந்து வரப்பெற்ற அறிக்கையின் அடிப்படையில் இது குறித்து திருத்திய அரசாணை கோரி அரசுக்கு முன்மொழிவு  அனுப்பபட்டது. அதனை தொடர்ந்து, அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள முதுநிலை திருக்கோயில்களில் பணிபுரியும் இசை கலைஞர்களுக்கு கடந்த 1.7.1997 முதல் நடைமுறைப்படுத்த தெரிவித்து கொள்ளப்படுகிறது. ₹3,200-85-4900 ஊதிய  விகிதத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து அவர்களுக்குண்டான பணப்பயன்களை வழங்கிட இதன் மூலம் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

Related Stories:

>