×

திருச்சி கல்லூரியில் மோதல் அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த மாணவர்கள்: நீதிமன்றம் நூதன தண்டனை

திருச்சி: திருச்சி கல்லூரியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றம் நூதன தண்டனையால் அரசு மருத்துவமனையை மாணவர்கள் சுத்தம் செய்தனர். திருச்சி- மணப்பாறை சாலையில் தீரன் நகரில் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு திருச்சி மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் ஒருசிலர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதியில் தங்கி படித்த இருதரப்பு மாணவர்களிடையே சீனியர் ஜூனியர் குறித்து மோதல் ஏற்பட்டது. கிரிக்கெட் பேட், ஸ்டம்புகளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் கல்லூரி கேண்டீனில் இருந்த சோடா பாட்டில்களையும் எடுத்து வீசி மோதலில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 28 மாணவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் 28 பேரும், தாங்கள் சமாதானமாக செல்கிறோம். எங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கியது. அதாவது ஒரு நாள், திருச்சி கிஆபெ அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை கண்காணிக்க குழுவையும் அமைத்த நீதிமன்றம், இது தொடர்பான அறிக்கையை பிப்ரவரி 26ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.அதன்படி மருத்துவமனையை சுத்தம் செய்வதற்காக 28 மாணவர்களும் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர். முதலில் அவர்களுக்கு டாக்டர் நிரஞ்ஜிதா தலைமையில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இந்த பணியை மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காண்ட்ராக்ட் நிறுவனத்தை சேர்ந்த நிதிஷ் என்பவர் கண்காணித்தார். மாணவர்கள் அரசு மருத்துவமனையை சுத்தம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : confrontation government hospital ,Trichy College Students ,Trichy College , Students ,cleaned,confrontation government ,hospital ,Trichy College
× RELATED சீனியர் ஆண்களுக்கான ஹாக்கி திருச்சி கல்லூரி அணி சாம்பியன்