×

வங்கி வாடிக்கையாளர் உள்பட 40 பெண்களுடன் காமக்களியாட்டம்: திருச்சியில் சுற்றித்திரிகிறாரா கேஷியர்?... பிடிப்பதில் போலீஸ் மெத்தனம் என மனைவியின் வக்கீல் குற்றச்சாட்டு

தஞ்சை: வங்கி வாடிக்கையாளர் உள்பட 40 பெண்களுடன் காமக்களியாட்டம் நடத்திய கேஷியரை தஞ்சை போலீசார் பிடிக்காமல் மெத்தனம் காட்டுகின்றனர் என மனைவியின் வக்கீல் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவரது தாய் லில்லி ஹைடா. எட்வின், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை இந்தியன் வங்கி கிளையில் காசாளராக பணியாற்றி வருகிறார். எட்வினுக்கும், தஞ்சை ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த அருள்மணி மகள் தாட்சருக்கும் கடந்த டிசம்பர் 2ம் தேதி திருமணம் நடந்தது. முதலிரவிலேயே மனைவியை எட்வின் தவிர்த்துள்ளார். மனைவி தாட்சர், ஜெயக்குமாரின் செல்போன்களை ஆராய்ந்தபோது எட்வின் மற்றும் பல பெண்களின் ஆபாச படங்கள், உடலுறவு வீடியோக்கள் இருந்தது. மேலும் 40 பெண்களுடன் ஜெயக்குமாருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி தாட்சர், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

கோர்ட் உத்தரவுப்படி வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கடந்த 7ம் தேதி 4 பிரிவுகளின்கீழ் எட்வின், அவரது தாய், தங்கை, சித்தி, லீலைகளுக்கு உடந்தையாக செயல்பட்ட வங்கி ஊழியர் தேவி பிலோமினா ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிந்து 2 வாரமாகியும் நடவடிக்கை எடுக்காமல் வல்லம் போலீசார் மெத்தனம் காட்டுவதாக தாட்சர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதுபற்றி தாட்சரின் வழக்கறிஞர் ஜீவக்குமார் கூறுகையில், ‘‘எட்வின் சுதந்திரமாக உலா வருகிறார். அவரை கைது செய்ய தஞ்சை போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தில் இருந்துதான், தாட்சருக்கு எட்வின் கடிதம் அனுப்பி உள்ளார். எனவே அவர் திருச்சியில்தான் சுற்றித்திரிகிறார் என்பது தெரிகிறது. ஆனால், வழக்கை மணப்பாறைக்கு மாற்றுவதிலேயே வல்லம் போலீசார் குறியாக உள்ளனர். போலீசார் இப்படி அலட்சியமாக இருந்தால் சாட்சிகளை அழிக்கும் பணியில் எட்வின் ஈடுபடுவார்.

எனவே அவரை உடனே கைது செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இதற்கிடையில் வழக்கு விசாரணை, மணப்பாறை போலீசுக்கு மாற்றப்பட்டதாக வெளியான தகவல் குறித்து திருச்சி எஸ்.பி. ஜியாவுல்ஹக் கூறுகையில், ‘‘குற்றம் திருச்சி மாவட்டத்தில் நடந்திருந்தாலும், வல்லம் போலீசாரின் விசாரணை அறிக்கை டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின், திருச்சி மாவட்ட போலீசார் விசாரிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டால் மட்டுமே சாத்தியமாகும்’’ என்று சொன்னார்.

Tags : women ,bank client , 40 Woman, Trichy, Cashier
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது