வாடகை தராமல் ஓட்டல் அறையை காலி செய்த நடிகை

சென்னை: தயாரிப்பாளருடன் தகராறு ஏற்பட்டதால், வாடகை தராமல் ஓட்டலில் இருந்து நடிகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் மெஹரின் பிர்ஸடா. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘அஸ்வத்தாமா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதில் நாகசவுரியா ஹீரோ. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சக நட்சத்திரங்களுடன் மெஹரின் கலந்துகொண்டார். கடைசிநாளில் மற்றொரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த மெஹரினை இதில் பங்கேற்க தயாரிப்பாளர் அழைத்தார். ஆனால், தனக்கு ஸ்கின் அலர்ஜி ஏற்பட்டிருப்பதாக கூறி அவர் மறுத்துவிட்டார்.

இதனால் தயாரிப்பாளருக்கும், மெஹரினுக்கும் தகராறு ஏற்பட்டது. நிகழ்ச்சிக்கு வராவிட்டால் ஓட்டல் வாடகை தர முடியாது என்று தயாரிப்பாளர் கறாராக சொல்லிவிட்டார். இதில் கடும் கோபமடைந்த மெஹரின், மறுநாள் காலை யாரிடமும் சொல்லாமல், வாடகையும் தராமல் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறினார். இதையறிந்த ஓட்டல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்தது. மெஹரின் தங்கியிருந்த அறைக்கு வாடகை தரும்படி தயாரிப்பாளரிடம் கேட்டது. ஆனால், அவர் கொடுக்க மறுத்துவிட்டார். பலத்த வாக்குவாதத்துக்கு பிறகு தயாரிப்பாளர் வாடகை செலுத்தியதாக கூறப்படுகிறது.

Related Stories: