சம்பளத்தை திருப்பி தர வேண்டும் நடிகை திரிஷாவுக்கு தயாரிப்பாளர் எச்சரிக்கை

சென்னை: திருஞானம் இயக்கத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள படம் ‘பரமபதம் விளையாட்டு’. இப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. இதில் திரிஷா பங்கேற்கவில்லை. அவர் துபாய் சென்றுள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, ‘‘தான் நடித்த  இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு திரிஷா வரவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். தொடர்ந்து அவர் ஒத்துழைப்பு  கொடுக்காவிட்டால்,  சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பி தர வேண்டும்  என தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன்’’ என்றார்.

Related Stories:

>