துபாய் டென்னிஸ்: பைனலில் ஹாலெப்

துபாய்: துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் தகுதி பெற்றார். அரை இறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடியுடன் (52வது ரேங்க்) மோதிய ஹாலெப் (2வது ரேங்க்) 6-2, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 2 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு அரை இறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா (19வது ரேங்க்) 7-6 (7-5), 7-6 (7-2) என்ற நேர் செட்களில் குரோஷியாவின் பெத்ரா மார்டிச்சை (15வது ரேங்க்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி  2 மணி, 12 நிமிடத்து நீடித்தது. இறுதிப் போட்டியில் ஹாலெப் - ரிபாகினா மோதுகின்றனர்.

Related Stories:

>