டாடா அல்ட்ராஸ்

இந்தியாவில் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு. அந்த வகையில், இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காருக்கு இந்திய மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த காரை டாடா நிறுவனம் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா வாகன கண்காட்சியில் முதல்முறையாக காட்சிப்படுத்தியது. தற்போது இந்திய கண்காட்சியிலும் அறிமுகம் செய்துவிட்டது. இதையடுத்து, இந்த மின்சார காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான பணியில் டாடா தீவிரமாக களம் இறங்கியுள்ளது. டாடா நிறுவனம் ஏற்கனவே டிகோர் வடிவிலான மற்றும் நெக்ஸான் வடிவிலான மின்சார கார் உற்பத்தி செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, மூன்றாம் மாடலாகவே இந்த அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மின்சார கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார், சிப்ட்ரான் எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், மற்ற மின்சார கார்களைவிட கூடுதல் ரேஞ்ச் வழங்கும் வகையில் உள்ளது. அதாவது, முழுமையான சார்ஜில் 250 கி.மீ. தூரம் பயணிக்கும். தொழில்நுட்ப அம்சத்திலும் எந்த ஒரு குறையுமின்றி இந்த கார் காட்சியளிக்கிறது. குறிப்பாக, சொகுசு வசதியில் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Related Stories:

>