×

ஆலந்தலையில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர்.. தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் ரூபாய் 52.46 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தாமிரபரணி - கருமேனி - நம்பியாறு இணைப்பு திட்டப்பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிவுற்று பயன்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிட்ட அவர்,  நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவிக்காமல் எதை செய்ய முடியுமோ அதை அறிவித்து செயல்படுகிறோம் என தெரிவித்தார்.

மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நல திட்ட அறிவிப்புகளையும் முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். திருச்செந்தூர் உடன்குடி சந்தை மேம்படுத்தப்படும் என்றும் ஆலந்தலையில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். மேலும் தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரை

மேலும் பேசிய முதல்வர் பழனிசாமி,இந்தியாவிலேயே பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கிய ஒரே அரசு, அதிமுக அரசு. பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி உள்ளேன்.இந்த நாள் ஒரு சிறப்பான நாள். சொன்னதையும் செய்வோம்... சொல்லாததையும் செய்வோம் என்ற அடிப்படையில் செயல்படுகிறோம்.மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, அதிமுக அரசு.இந்தியாவிலேயே சிறந்த ஆளுமை மிக்க மாநிலமாக திகழ்கிறது தமிழகம். திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு திட்டம் அமைக்கப்படும்.கருமேணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.சாத்தான்குளம் வட்டத்திற்கு புதிய தாலுகா அலுவலகம் கட்டப்படும், என்றார்.

Tags : Alandale ,announcement ,Damirapparani - Karumaniyar ,CM Palanisamy ,Thamiraparani , CM, Edappadi Palanisamy, Text, CM, Edappadi Palanisamy, Thoothukudi
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...