×

20 போக்சோ வழக்குகளில் 20 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த போலீஸ் வக்கீல்களுக்கு டிஐஜி பாராட்டு

திருச்சி:  திருச்சி சரகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தொடரப்பட்ட போக்சோ வழக்குகளில்
நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் 2019ம் ஆண்டில் 20 வழக்குகளில் 20 குற்றவாளிகளுக்கு ஒரு இரட்டை ஆயுள் தண்டனை, இரண்டு ஆயுள் தண்டனை மற்றும் 113 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 7 குற்றவாளிகளுக்கு மொத்தம் ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 47 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு

அடுத்ததாக கரூர் மாவட்டத்தில் 5 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிகளுக்கு மொத்தம் ஒரு இரட்டை ஆயுள் தண்டனை, நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் 20 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 4 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு மொத்தம் 28 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகளுக்கு மொத்தம் ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 18 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் சிறப்பான முறையில் வழக்குகளை கையாண்ட புலன் விசாரணை, நீதிமன்ற காவலர்கள், அரசு வக்கீல்கள் மற்றும் சாட்சிகள் ஆகியோர்களை டிஐஜி பாலகிருஷ்ணன் நேரில் வரவழைத்து பாராட்டினார். அப்போது திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் மற்றும் டிஎஸ்பி உடனிருந்தனர்.


Tags : police attorneys ,DIG ,Paxo , Trichy, Pudukkottai, Karur
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி