×

சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம்: விவசாயிகள் கூட்டத்தில் யோசனை

சென்னை: பரந்தூர் பகுதியில் சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1500 ஏக்கர் நிலத்தில் விமான நிலையம் அமைக்கலாம் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம்: காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பரந்தூர் பகுதியில் சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1500 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்கலாம்  என விவசாயிகள் யோசனை தெரிவித்தனர்.


Tags : Airport ,land ,Sasikala ,meeting ,Benami , Airport on 1,500 acres of land in the name of Sasikala's Benami: The idea of a farmers' meeting
× RELATED சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலும் கொரோனா பரிசோதனை