மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு: டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்பு

சென்னை: 1948ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் முதன்முதலில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் பதிப்பை லண்டனில் வெளியிட்டனர். உலகின் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த காலகட்டத்தில் அதற்கு தீர்வு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில்தான் உள்ளது என்ற அடிப்படையில் பிப்ரவரி 21ம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ஜப்பானில் இருந்து சிலி நாடு வரை வாசிப்பது என டிரை கான்டிநென்டல் இன்டர்நேஷனல் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு இயக்கம் வெள்ளியன்று உலகம் முழுவதும் நடந்தது. அதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கணேசன் தலைமையில் வாசிப்பு இயக்கம் நடந்தது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிய அறிஞர் சிவலிங்கம்,  மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தனர். மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி, வாசிப்பு இயக்கத்தை நிறைவு செய்து பேசினார்.

Related Stories:

>