×

லாட்டரியில் ரூ.60 லட்சம் பரிசு கிடைத்த இன்ப அதிர்ச்சியில் உயிரிழந்த வியாபாரி: கேரளாவில் சோகம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா அருகே  மாவேலிக்கரை பகுதியை சேர்ந்தவர் தம்பி (63). லாட்டரி விற்பனை செய்து  வந்தார். சில நாட்களுக்கு முன்பு கேரள அரசின் சக்தி லாட்டரி  சீட்டுகள் வாங்கி விற்பனைக்கு வைத்திருந்தார். ஆனால், அவற்றில் 10  டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. இதனால் அவர், கடும் மன உளைச்சலில் இருந்து  வந்தார்.இந்நிலையில், லாட்டரி குலுக்கல் முடிவு வெளியானது. அதை பார்த்த தம்பி, மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார். காரணம், அவரிடம் இருந்த விற்காத லாட்டரி சீட்டுகளில் ஒன்றுக்குதான் முதல் பரிசான ₹60  லட்சம் கிடைத்து இருந்தது. .

அதே மகிழ்ச்சியில், அந்த லாட்டரி சீட்டை எடுத்துச் சென்று  அருகில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்தார். பின்னர் வீடு திரும்பிய அவருக்கு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் உடனடியாக  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே தம்பி பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Dealer ,death ,Kerala , Trader ,died , Rs 60 lakh in lottery, tragedy ,Kerala
× RELATED நடிகை பலாத்கார காட்சிகள் வெளியான...