×

ககன்யான் திட்டத்தில் அடுத்த ஓராண்டுக்குள் ரோபோட்டுடன் விண்கலம் அனுப்பப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை

சென்னை : ககன்யான் திட்டத்தில் அடுத்த ஓராண்டுக்குள் ரோபோட்டுடன் விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவன் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ககன்யான் திட்டத்திற்கான அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது என்றார். அடுத்த 6 மாதத்தில் ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும் என்றும் அதன் பின்னர் மனிதர்களை கொண்ட விண்கலம் அனுப்பப்படும் என்றும் சிவன் கூறினார்.

மேலும் விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் 15 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு, அதன் பின்னர் அவர்கள் விண்வெளிக்கு செல்வார்கள் என்றும் சிவன் குறிப்பிட்டார். சந்திராயன் 3 திட்டப்பணிகள் சிறப்பாக நடந்து வருவதாக கூறிய அவர், இதையும் அடுத்த ஓராண்டுக்குள் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறினார். மீனவர்களுக்கான செயலி உருவாக்கப்பட்டு தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய அவர், அதில் ஏதேனும் குறைப்பாடுகள் இருப்பின் அது சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


Tags : spacecraft ,Shiva ,ISRO , Kaganian, robot, spacecraft, ISRO, leader, Shiva
× RELATED இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது