×

கொள்ளிடம் அருகே பழையார் மீன்பிடி துறைமுகத்தை உடனே சீரமைக்க வேண்டும்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் பராமரிப்பின்றி உள்ளது. எனவே இதை உடனே சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. மாவட்டத்திலேயே இரண்டாவது சிறந்த துறைமுகமாக இருந்து வரும் இந்த துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 350 விசைப்படகுகள், 250 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

மேலும் இத்துறைமுகத்தில் வலை பின்னுதல், உலர வைத்தல், மீன்கள் உலரவைத்தல், விற்பனை செய்தல் மீன்களை பதப்படுத்தி பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த துறைமுக வளாகம் இரவு நேரங்களில் இருண்டே கிடக்கிறது. அனைத்து மின்விளக்குகளும் இரவு நேரங்களில் எரிவதில்லை. மேலும் துறைமுகப்பகுதி பராமரிப்பின்றி காணப்படுகிறது.

சுத்தம் சுகாதாரம் பின்பற்ற நடவடிக்கை இல்லை. துறைமுகத்திலேயே மீன்வளத்துறை அலுவலகம் இருந்தும் பராமரிப்பின்றியும் அசுத்தமாகவும் உள்ளது. துறைமுக வளாகத்தில் ஆங்காங்கே சீமைக்கருவேல முட்செடிகள் வளர்ந்து அதனை அகற்றுவதற்கும் மீன்வளத்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீன்வளத்துறை அலுவலக கட்டிடமும் பழுதடைந்து பாழடைந்த கடிடம் போல் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு துறை சார்ந்த அதிகாரிகளோ, ஊழியர்களோ மாதத்தில் ஒரு சில நாள் கூட வருவது கிடையாது என்று மீனவர்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இங்கு 5 வருடங்களுக்கு முன்பு புதியதாகக் கட்டப்பட்ட கழிவுநீர் செல்லும் கால்வாய் தூர்ந்து போய் உள்ளது. அந்த கால்வாயில் தேங்கி நிற்கும் நீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் சுற்றுப்புறச் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, சிறந்த துறைமுகமாக இருந்து வரும் இந்த பழையாறு மீன் பிடி துறைமுகத்தை பல முறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மீனவர்களின் நலன் கருதி பழையாறு துறைமுகத்தை உடனடியாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

துறைமுக வளாகத்தில் ஆங்காங்கே சீமைக்கருவேல முட்செடிகள் வளர்ந்து அதனை அகற்றுவதற்கும் மீன்வளத்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீன்வளத்துறை அலுவலக கட்டிடமும் பழுதடைந்து பாழடைந்த கடிடம் போல் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு துறை சார்ந்த அதிகாரிகளோ, ஊழியர்களோ மாதத்தில் ஒரு சில நாள் கூட வருவது கிடையாது என்று மீனவர்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : fishing harbor ,Pudar ,Koladi , Near the loot Pandar fishing harbor should be revamped immediately
× RELATED மீன்பிடி துறைமுகத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு