×

சிட்லபாக்கம் இடுகாட்டில் குப்பை கொட்டும் விவகாரம் ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

சென்னை: சிட்லபாக்கம் இடுகாட்டில் குப்பை கொட்டுவது குறித்து ஆய்வு நடத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், மாசுகட்டுப்பாடு வாரியம், பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சிட்லபாக்கம் ஏரி பகுதியில் குப்பை கொட்டுவதற்கு தடை உள்ளது. ஆனால், பஞ்சாயத்து நிர்வாகம் ஏரிக்கு அருகில் உள்ள இடுகாட்டில் குப்பை கொட்டி தீ வைப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இது குறித்து, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அமர்வில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சட்டசபை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இடுகாடுகள் முறையாக பராமரித்து பல்லுயிர் பூங்கா அமைக்கப்படுகிறது. இத்திட்டம் முடிவடையாமல், இடுகாடு குப்பை கொட்டும் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும், குப்பையை எரித்து காற்று மாசு ஏற்படுத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியமாக செயல்படுவதையே காட்டுகிறது. எனவே உள்ளாட்சி அமைப்புகள், திடக்கழிவு மேலாண்மை விதியை பின்பற்றி, குப்பையை சேகரித்து, தரம் பிரித்து உரிய முறையில் திடக்கழிவு மேலாண்மை செய்ய வேண்டும்.
சிட்லபாக்கம் இடுகாட்டில் குப்பை கொட்டுவது குறித்து ஆய்வு செய்ய, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சிட்லபாக்கம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர் சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து குப்பை கையாள எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு மாதத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Citlabakam ,Sitlabakkam , Sitlabakkam graveyard ,littering case,filed in a month
× RELATED சென்னை – தாம்பரம்...