×

அடுத்த மாதம் காஸ் சிலிண்டர் விலை குறையுமா? : தர்மேந்திர பிரதான் பதில்

ராய்ப்பூர்: காஸ் சிலிண்டர் விலை அடுத்த மாதம் குறையலாம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து, தொடர்ந்து 6 மாதங்களாக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்துள்ளது. இதில், அதிகபட்சமாக கடந்த 12ம் தேதி சென்னையில் மானியமற்ற சிலிண்டர் 147 அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோக 14.2 கிலோ சிலிண்டரின் விலை நடப்பு மாதத்துக்கு டெல்லியில் 144.50 உயர்த்தப்பட்டு 858.50 ஆகவும், சென்னையில் 147 உயர்த்தப்பட்டு 881 ஆகவும், கொல்கத்தாவில் 149 உயர்த்தப்பட்டு 896 ஆகவும், மும்பையில் 145 உயர்த்தப்பட்டு 829.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக காஸ் சிலிண்டர் 226.50 உயர்த்தப்பட்டு 1,589.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,466 ஆக உள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கேட்டபோது, ‘‘காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால்தான் இந்த மாதம் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், அடுத்த மாதம் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன’’ என்றார்.

Tags : Dharmendra Pradhan , price ,gas cylinder, drop next month, Dharmendra Pradhan's answer
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு