×

பெண்களுக்கு நிரந்தர பணி, உயர் பதவி உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு ராணுவ தளபதி வரவேற்பு

புதுடெல்லி: ராணுவத்தில் குறுகிய காலப் பணியில் (14 ஆண்டுகள்) இருக்கும் பெண் அதிகாரிகள், நிரந்தரமாக பணியாற்றவும், உயர் பதவிகள் வழங்கவும் 3 மாதத்துக்குள் அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி  உத்தரவு பிறப்பித்தது.  இது தொடர்பாக ராணுவ தளபதி ஜெனரல் நரவானே டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:வீரர்களை மதம், ஜாதி, பாலின அடிப்படையில் இந்திய ராணுவம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இந்திய ராணுவத்தின் மனநிலை இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. அதனால்தான், நாங்கள் கடந்த 1993ம் ஆண்டே பெண் அதிகாரிகளை  ராணுவத்தில் சேர்த்தோம். பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை ராணுவம் எடுத்துள்ளது.

ராணுவ போலீஸ் மையங்கள், பள்ளிகளில் 100 பெண்கள் பயிற்சியில் உள்ளனர். பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணியும், பதவி உயர்வும் வழங்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு வரவேற்கத்தக்கது. இது, அடுத்த கட்டத்துக்கு  முன்னேறிச் செல்வதற்கான தெளிவை கொடுத்துள்ளது. ராணுவம் திறம்பட செயல்பட, பெண் அதிகாரிகள் உயர் பதவியில் நியமிக்கப்படுவார்கள். நாட்டுக்கு சேவை செய்ய இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் சம  வாய்ப்பு அளிக்கப்படும். நிரந்தரமாக பணியாற்ற விருப்பம் கேட்டு பெண் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Army ,Commander Receives Permanent Service for Women, Supreme Court Order Women for Permanent Work ,Commander ,Supreme Court Order Welcome , Permanent work, Supreme Court ,Army Commander
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...