×

சேலம் அருகே 2 பஸ்கள் மோதல் நேபாளத்தை சேர்ந்த 7 பேர் பலி

ஓமலூர்: சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே நேற்று அதிகாலை, 2 பஸ்கள் மோதிய விபத்தில், நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேபாள நாட்டின் காத்மாண்டு அருகே சுன்சாரி மாவட்டத்தை சேர்ந்த  34  பேர், இந்தியாவில் உள்ள இந்து கோயில்களை சுற்றி பார்ப்பதற்காக, கடந்த 6ம்தேதி  மினி பஸ்சில் சுற்றுலா புறப்பட்டனர். காத்மாண்டுவை சேர்ந்த கவுல்ராம் சௌத்ரி,  இட்டோடி சுந்தாரி ஆகியோர் மாறி மாறி ஓட்டி வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம், கன்னியாகுமரி சென்று அங்குள்ள கோயில்களில் தரிசனத்தை முடித்தனர். அங்கிருந்து ராஜஸ்தான் செல்வதற்காக சேலம்-பெங்களூரு தேசிய  நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை  வந்து கொண்டிருந்தனர். அப்போது, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நரிப்பள்ளம் என்னுமிடத்தில் காளியம்மன் கோயில் மண்டபத்தை பார்த்தனர்.

நள்ளிரவு 1 மணியானதால் அங்கு ஓய்வு எடுத்துவிட்டு காலையில் செல்லலாம் என முடிவு செய்து, இடது பக்க சாலையில் இருந்து வலதுபக்க சாலைக்கு மினி பேருந்தை டிரைவர் கவுல்ராம் சௌத்ரி திருப்பியுள்ளார். அப்போது, பெங்களூருவில்  இருந்து கேரளா சென்ற ஆம்னி பஸ், மினி பஸ்சின் நடுப்பகுதியில் பலமாக மோதியது. இதில் ேநபாள சுற்றுலா பயணிகள் 2 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகினர். 21 பேர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுெதாடர்பாக ஆம்னி பஸ் டிரைவர்களான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இந்திரா நகரை சேர்ந்த முருகேஷ்வரன் (42), கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் புத்தாண் பகுதியை சேர்ந்த ஷாமில் (23) ஆகியோர் ைகது செய்யப்பட்டனர்.

முதல்வர் இரங்கல்
சட்டப்பேரவையில் நேற்று திருப்பூர் (வடக்கு) கே.என்.விஜயகுமார் (அதிமுக), திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் நடந்த இரு வேறு சாலை விபத்துகள் தொடர்பாக கொண்டு வந்த கவன ஈர்ப்பின் மீது முதல்வர் எடப்பாடி பேசியதாவது:நேற்று அதிகாலை 4 மணி அளவில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகில், சேலத்தில் இருந்து எர்ணாகுளம் சென்ற கேரள மாநில அரசு பேருந்தின் மீது, எதிர்புறமாக கேரளாவில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி மோதியதில், கேரளாவை  சேர்ந்த 19 பேர்  உயிரிழந்தனர். அதேபோன்று, நேபாள நாட்டை சேர்ந்த சுற்றுலா பேருந்து சேலம் மாவட்டம், ஒமலூரில் ஏற்பட்ட  விபத்தில், 7 நேபாள நாட்டினர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த  இரங்கலைதெரிவித்துக் கொள்கிறேன்  என்றார்.,

Tags : Nepal ,Salem Seven , 2 buses collide ,Salem,Nepal
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது