×

மேக்சிஸ் நிறுவன முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி மீதான விசாரணை மே.4க்குள் முடிக்க சிபிஐ நீதிமன்றம் கெடு

புதுடெல்லி: மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீதான விசாரணைைய மே 4ம் தேதிக்குள் முடிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதுகுறித்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, இருவருக்கும்ஜாமீன் வழங்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், நேற்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகர் அமர்வில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிபதி முன்னிலையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதில், ‘‘மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நான்கு வெளிநாடுகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். இதையடுத்து அவர்களின் தரப்பு பதிலுக்காக காத்து கொண்டிருக்கிறோம்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், ‘‘மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் தொடர்பான வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதமபரம் ஆகியோர் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் மே 4ம் தேதிக்குள் சிபிஐ மற்றும் அமலாகத்துறை ஆகியோர் முடிக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : court ,CBI ,P. Chidambaram ,Karthi ,Karthi CBI , case ,Maxis ,corporate malpractice, P. Chidambaram, Karthi
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...