×

சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த 14ம் தேதி சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 17ம் தேதி முதல் நேற்று (20ம் தேதி) மாலை வரை 4 நாட்கள் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று, ஓ.பன்னீர்செல்வம் பதிலுரையுடன் சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்தது. இதையடுத்து சபாநாயகர் தனபால், தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார். மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை. இதனால் இதற்கான கூட்டம் மார்ச் மாதம் கூட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : meeting ,Legislative Meeting , Legislative Meeting, Adjournment
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...