×

வள்ளியூர் அருகே கழிவு நீரோடையை அடைக்கும் பிளாஷ்டிக் கழிவால் சுகாதார சீர்கேடு: பொதுமக்கள் அவதி

வள்ளியூர்: வள்ளியூர் அருகே கிழவனேரியில் கழிவு நீரோடையை அடைக்கும் பிளாஷ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. வள்ளியூர் அருகே அச்சம்பாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிழவனேரி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் தேவாலயம், மழலையர் பள்ளியும் அமைந்துள்ளது. இங்குள்ள கழிவுநீரோடையில் கொட்டப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

இதில் உருவாகும் ஆயிரக்கணக்கான கொசுக்களால் அப்பகுதி மக்கள் இரவில் நிம்மதியான தூக்கம் இழந்து தவிக்கின்றனர். அத்துடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : Valliyur Valliyoor , Valliyoor, Plastic Waste, Health Disorder
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...