×

கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார்

வாஷிங்டன்: கணினி அறிவியலில் கட், காப்பி, பேஸ்ட் செயல்முறையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கணினி உலகின் வரப்பிரசாதமாக கருதப்படும் டெஸ்லர் தனது 74 வது வயதில் காலமானார். முன்னாள் ஜெராக்ஸ் ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர், இன்று கணினியை எளிமையாக பயன்படுத்த உதவும் கட், காப்பி, பேஸ்ட் செயல்பாடுகளை கண்டுபிடித்தவர் ஆவார். அமெரிக்காவை சேர்ந்த லாரி டெஸ்லர், கணினி தயாரிப்பு மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்தார். தொடர்ந்து, ஜெராக்ஸ் பார்க், ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை படைத்தவர். அந்த வகையில் இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் உலாவி அதாவது ப்ரவுசரை உருவாக்கி கணினி மயமாக்கலுக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

கடைசியாக, கணினி வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜிப்சி குறித்து டெஸ்லர் உற்சாகத்துடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், இன்றளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிரபலமான கட், காப்பி, பேஸ்ட் என்ற செயல்முறையை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். 74 வயதான லாரி டெஸ்லர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கட், காப்பி, பேஸ்ட், பைன்ட் அன்ட் ரீபிலேஸ் மற்றும் பலவற்றை கண்டுபிடித்ததவர், முன்னாள் ஜெராக்ஸ் ஆராய்ச்சியாளர் லாரி டெஸ்லர் ஆவார். உங்கள் வேலை நாள் எளிதாகும் புரட்சிகர கருத்துக்களுக்கு நன்றி என்று ஜெராக்ஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

Tags : Larry Tessler ,American , Computer scientist, cut, coffee, paste, process, American scientist, Larry Tessler has passed away
× RELATED காங்கிரசின் வங்கிக் கணக்குகள்...