×

உள்ளூரில் நல்லவன் வெளியூரில் கெட்டவன்: காஷ்மீரை பிரச்சனைக்குரிய பகுதியாக காட்டும் கூகுள் மேப்ஸ்...மீண்டும் புதிய சர்ச்சை

டெல்லி: காஷ்மீர் எல்லையை பிரச்சனைக்குரிய பகுதிகள் என்று கூகுள் மேப்ஸ் குறிப்பிட்டுள்ளதால், மீண்டும் காஷ்மீர் பற்றிய சர்ச்சைகள் வெடித்துள்ளது. உலகின் மிகப் பிரபலமான தேடுதல் தளம் கூகுள். இது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் ’கூகுள்  மேப்ஸ்’ உலக நாடுகளின் எல்லை தொடங்கி, வழி தெரியவில்லையென்றால் உள்ளூர் தெருக்கள் வரை இதில் தேடி நாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்த சேவையில் காஷ்மீர் பகுதிகளை இந்தியாவில் இருந்து தேடும் பொழுது அதை இந்தியாவின் பகுதிகள் என்றும், அதே காஷ்மீரை வெளிநாடுகளில் இருந்து  தேடிப்பார்க்கும் போது பிரச்சனைக்குரிய பகுதிகள் என்றும் கூகுள் மேப்ஸ் குறிப்பிடுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காஷ்மீரின் எல்லைகளை  பொறுத்தவரை ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் என இருநாடுகளுக்கிடையே பதட்டம் நீடித்துவரும் நிலையில் இது மீண்டும் இந்த விவகாரத்தில் ஒரு புதிய  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, ’இந்திய பயனாளர்களுக்கு காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்று காட்டும் கூகுள்.  இதர நாட்டு பயனாளர்களுக்கு குறிப்பாக பாகிஸ்தான் பயனாளர்களுக்கு காஷ்மீரின் சில பகுதிகளை சிகப்பு புள்ளிகளால் குறிப்பிட்டு பிரச்சனைக்குரிய பகுதிகள்  என்று காட்டுகிறது.’ என புகைப்படத்தோடு செய்தி வெளியிட்டுள்ளது. இது கூகுளை பயன்படுத்தும் பயனாளர்களின் பகுதி அடிப்படையில் அவர்களை  திருப்திப்படுத்தும் செயல் என்றும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுளின் செய்திதொடர்பு அதிகாரி ஒருவர்,’இது கூகுளின் உலகளாவிய கொள்கைகளில் ஒன்று எனவும்,  உலகளவில் கூகுளை பயன்படுத்தும் பயனாளர்கள் பிரச்சனைக்குரிய சில பகுதிகளை தெரிந்துகொள்ள, தேடும் பகுதிகளைப் பயனாளர் சேர்ந்த பகுதிகளைப்  பொறுத்து காண்பிக்கும் ’டொமைன்’ எனப்படும் இயங்குதளம் தங்களைத் தாங்களே இவ்வாறு தகவமைத்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

Tags : guys ,Kashmir ,Google Maps Shows Kashmir , Google Maps Shows Kashmir as Problem
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...