×

தமிழர் நாகரீகத்தின் தொன்மையை உலகிற்கு வெளிப்படுத்த விரைவில் 5ம் கட்ட கீழடி அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படும் : தொல்லியல் துறை நம்பிக்கை

சிவகங்கை : தமிழர் நாகரீகத்தின் தொன்மையை உலகிற்கு வெளிப்படுத்த இதுவரை நடைபெற்ற அகழாய்வு முடிவுகளை அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு சார்பில் 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வுகளில் பல்வேறு வடிவிலான செங்கல் கட்டுமானங்கள், சுருள் வடிவிலான சுடுமண் குழாய்கள், சங்கு வளையல்கள் போன்று சுமார் 9,000 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதன் முடிவுகள் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று தொல்லித்துறை துறையின் துணை இயக்குனர் கூறியுள்ளார்.

இதுவரை நடைபெற்ற 5 கட்ட அகழாய்வுகளின் முடிவுகளையும் உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அகழாய்வு முடிவுகளை வெளிப்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்றார். இதனிடையே 6ம் கட்ட அகழாய்வு செய்வதற்கான இடங்கள், தரை ஊடுருவல் தொலை உணர்வின் மதிப்பாய்வு போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடையாளம் காணப்பட்டுள்ளன.


Tags : world ,Archeology Department ,Tamil ,Department of Archeology , Government of Tamil Nadu, Archeology Department, Faith, Excavation, Subordinate
× RELATED உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்...