×

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிசூடு: ஒருவர் படுகாயம்

இராமநாதபுரம்: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி அருகே கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா, கச்சத்தீவு, ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வருவதாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிப்பதும், சில நேரங்களில் சிறைபிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த ஓராண்டில் தமிழக மீனவர்கள் 50க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 10க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் மீன்பிடி வலைகள், உபகரணங்களை சேதப்படுத்தியதோடு மட்டுமின்றி மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த மீனவர் ஜேசு உள்ளிட்ட இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, துப்பாக்கியை காட்டி மிரட்டி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். மேலும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதால் படகு ஒன்றுக்கு ரூபாய் 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Sri Lankan Navy ,fishermen ,Kachchativu , Kachchativu, Fish, Fishermen, Sri Lanka Navy, Gunfire, One person injured
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!