×

மேற்குவங்கத்தில் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் 10ம் வகுப்பு ஆங்கில கேள்வித்தாளை டிக்டாக்கில் வெளியிட்ட மாணவன்

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் 10ம் வகுப்பு ஆங்கில கேள்வித்தாள் டிக்டாக்கில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஒரு மாணவன் பிடிபட்டான். மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள பைத்யநாத்பூர் உயர் நிலைப்பள்ளியில் நேற்று 10ம் வகுப்பு ஆங்கில தேர்வு நடைபெற்றது. சில நிமிடங்களில் அந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவன் ஒருவன் அந்த கேள்வித்தாளின் 3 பக்கத்தை செல்போன் கேமராவில் பதிவு செய்து பாலிவுட் பட இசையுடன் இணைத்து டிக்டாக்காக வெளியிட்டான். இந்த வீடியோ அடுத்த 1 மணிநேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் இடையே கேள்வித்தாள் பாதுகாப்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் கேள்வித்தாள் தேர்வு நடைபெறும் போதே வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து டிக்டாக்கில் ெவளியிட்ட மாணவனை பிடித்த போலீசார் அவனை மாவட்ட சிறுவர் நீதி ஆணையத்தின் முன் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் அவனது தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : student ,Diktak , student who published, 10th class English questionnaire , tiktok
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் போட்டிகள்...