×

மின்சார வாகனங்கள் இயக்கும் திட்டம் பற்றி மத்திய அமைச்சர் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: `பொதுப் போக்குவரத்து, அரசு வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேசிய மின் நகரும் வாகனங்கள் திட்டம் -2020’ மற்றும் அதற்காக `மின்சார வாகனங்களை கொள்முதல் செய்யும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், தற்போது இயங்கி வரும் பொது மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தன்னார்வ அமைப்பு சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷன் நேற்று ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், காற்று மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களை இயக்கும் திட்டம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் உச்ச நீதிமன்றத்துக்கு ேநரில் வந்து விளக்கமளிக்க வேண்டும்,’ என தெரிவித்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி, ‘`மத்திய அமைச்சர் நீதிமன்றத்துக்கு வருவது அரசியல் ரீதியாக தவறாக பார்க்கப்படும்,’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், `‘வக்கீல் பிரசாந்த் பூஷன் ஒரு அரசியல்வாதி என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், அவர் மத்திய அமைச்சருடன் நீதிமன்றத்தில் வாதம் செய்யமாட்டார்,’’ என்றனர். தொடர்ந்து வாதிட்ட பிரசாந்த் பூஷன், `மின் வாகனங்களை சார்ஜ் ஏற்றுவதற்காக பெட்ரோல் பங்க், மால்கள் போன்றவற்றில் ரீசார்ஜ் மையங்களை ஏற்படுத்த வேண்டும். மின் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், அந்த வாகனங்களை விற்பனை செய்யும்போது மானியங்கள் வழங்கப்பட வேண்டும்,’’ என்றார். பின்னர் மின்சார வாகனங்கள் தொடர்பாக அரசு முடிவு எடுக்க 4 வாரம் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Union Minister of State ,Union , Union minister , appear on the proposal , running electric vehicles
× RELATED டாஸ்மாக் மேல்முறையீடு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடக்கம்