×

மாநில விளையாட்டுப் போட்டி: காஞ்சி சங்கரா பல்கலை. முதலிடம்

காஞ்சிபுரம்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக அணி தங்கப் பதக்கம் வென்றது. பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாநில அளவில் நடைபெற்ற போட்டி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை, வேலூர் சிஎம்சி கல்லூரியில் நடைபெற்ற வாலிபால் போட்டிகளிலும் சங்கரா பல்கலை. அணி முதலிடம் பிடித்தது. அதேபோல் மன்னார்குடி ஏஆர்ஜே கல்லூரி நடத்திய மாநில அளவிலான அய்யநாதன் நினைவு கிரிக்கெட் போட்டியிலும் சங்கரா பல்கலைக்கழக அணி பங்கேற்று முதலிடம் பிடித்தது.  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற வாலிபால் மற்றும் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.வி.ராகவன் வாழ்த்து தெரிவித்தார்.Tags : State Sports Competition ,Kanchi Sankara University , State Sports Competition, Kanchi Sankara University, 1st place
× RELATED கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக...