×

அரியானாவில் விஷவாயு கசிவு 15 பேருக்கு சிகிச்சை

குருஷேத்ரா: அரியானாவில் குருஷேத்ரா நகரத்தின் அருகே உள்ள ஷாபாத் மார்கண்டா பகுதியில் குளிர்பதனக் கிடங்கு ஒன்று அமைந்துள்ளது. இதில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு சாப்பிட சென்றிருந்தபோது, அக்கிடங்கில் இருந்து அமோனியா வாயு கசிந்து வெளியேறியது. இதனை சுவாசித்த பாஜிகர் தேரா பகுதியை சேர்ந்த 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூச்சு திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அருகில் உள்ள ஷாபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவர் உயர் சிகிச்சைக்காக குருஷேத்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீயணைப்புப் படையினரின் உதவியுடன் வாயு கசிவு நிறுத்தப்பட்டதாகவும், புகார் அளிக்காததால் வழக்கு எதுவும் பதியவில்லை என்றும் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சுரேந்தர் சிங் தெரிவித்தார்.Tags : Haryana Haryana ,persons , Haryana, gas leak
× RELATED தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா?.....