×

பஸ் மோதி பெண் பலி

புழல்: கொடுங்கையூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கண்ணன் (60). இவரது மனைவி வசந்தி (55). நேற்று மாலை கொரட்டூரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு இருவரும் பைக்கில் சென்றனர். செந்தில் நகர் 400 அடி சாலையில் செல்லும்போது அரசு விரைவு பஸ் பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி வசந்தி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி இறந்தார். கணவர் காயத்துடன் உயிர் தப்பினார். வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விரைவு பஸ் டிரைவர் ஸ்ரீராமுலு (56) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : bus collision Bus collision , Woman killed,bus collision
× RELATED ஓட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண் பலி