×

வெடிகுண்டு வீசிய வாலிபர் சிக்கினார்

வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (35). இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இரு தினங்களுக்கு முன் முத்துச்செல்வம் நேரு நகர் சந்திப்பில் பைக்கில் சென்றபோது மொபட்டில் வந்த 3 பேர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டினர். பின்னர் தப்பிய ஓடிய முத்துசெல்வம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார். புகாரின்பேரில் பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரும்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் (20) என்பவரை கைது செய்தனர். மேலும் மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags : The bomb, the plaintiff
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...