×

சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் 2 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை : சுகாதாரத்துறை உறுதி

சென்னை: சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் உள்ள 19 பேரில் 2 பேருக்கு கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் 2 மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சீனாவில் இருந்து 10,000 டன் இரும்பு காயல் தட்டுகளை ஏற்றிக் கொண்டு மெக்நெட் என்ற கப்பல், நேற்று மாலை சென்னை துறைமுகம் வந்து அடைந்தது. இதையடுத்து சீன கப்பலில் வந்த ஊழியர்கள் மற்றும் மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கா என பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மாலுமிகள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர்களுடைய ரத்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் அறிகுறியை அடுத்து சீன கப்பலில் இருந்து இரும்பு பொருட்கள் இறக்கப்படவில்லை. ஊழியர்கள் யாரும் கப்பல் அருகே செல்ல அனுமதிக்கப்படவில்லை. தடுப்பு அபாய கயிறுகள் கட்டப்பட்டு துறைமுக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சீன கப்பலுக்கு அருகே கார்களை ஏற்றி வந்த மற்றொரு கப்பலில் இருந்து கார்களை இறக்கவும் ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 


Tags : sailors ,Chinese ,harbor ,Chennai ,Health Department 2 ,Chennai Harbor , China, Department of Health, Corona, Shipping, Sailors
× RELATED கப்பல் கேப்டன் எனக்கூறி அறிமுகம்...