×

ராஜஸ்தான் அணியின் வீரர் கார் விபத்தில் ‘ஜஸ்ட் மிஸ்’ தீவிர சிகிச்சைக்கு பின் ஓய்வு

கிங்ஸ்டன்: மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஓஷானே தாமஸ் கார் விபத்தில் சிக்கியதால், அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகள் வீரர்களில் அசோசியேஷன் தகவல்படி, செயின்ட் கேத்தரினில் உள்ள ஓல்ட் ஹார்பர் அருகே காரில் சென்றபோது இரண்டு வாகனங்கள் மோதியதில் தாமசுக்கு காயம் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், ஜமைக்கா வேகப்பந்து வீச்சாளரின் வீட்டில் ஓய்வில் இருப்பதாக தாமசின் உதவியாளர் கூறினார்.
தாமஸ் கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கடந்த மாதம் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

இலங்கை சுற்றுப்பயணத்திற்காக அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் 20 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10  சர்வதேச டி20 விளையாடியுள்ளார். அதில் முறையே 27 மற்றும் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வரும் மார்ச் 29ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் தாமஸ், ராஜஸ்தான் அணியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : player ,Rajasthan ,Miss ,mishap , Rajasthan team, Oceane Thomas, car accident
× RELATED பேட்மின்டன் வீரருடன் டாப்ஸி காதல்