×

நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற MAN vs WILD நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும்: பியர் கிரில்ஸ் ட்விட்

டெல்லி: நடிகர் ரஜினி பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகும் என நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார். அடர்ந்த காட்டில் சென்று சாகசம் செய்யும் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பயணித்தது போல, நடிகர் ரஜினிகாந்த்தும் காட்டுப் பகுதியில் சாகச பயணம் மேற்கொண்டார். அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உயிர் வாழ்வது எப்படி, காட்டாறு வெள்ளங்களில் தப்பிப்பது எப்படி என்பது போன்ற சாகசங்களை செய்து, அதை ஒரு தொடராக டி.வி சேனலில் வெளியிட்டு வருபவர் பியர் கிரில்ஸ். அவருக்கு உலகம் முழுவதும் பல கோடி பார்வையாளர்கள் இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு பியர் கிரில்ஸ் உடன் இத்தகைய திரில்லான பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டார். தற்போது பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் இத்தகைய காட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதாவது கடந்த மாதம் 27ம் தேதி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் நடந்த மேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் நடிகர் ரஜினி பங்கேற்றிருந்தார். இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா். இது ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது. ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிா் வாழும் முறைகளை உணா்த்தும் வகையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளாா். குறிப்பாக நீா்வளப் பாதுகாப்பு பற்றி அவா் இந்த நிகழ்ச்சியில் பேசுகிறாா். ரஜினிகாந்த் அடா்ந்த காடுகளில் பயணம் செய்யும் போது, இயல்பான சண்டைக் காட்சிகள், திரையில் அவா் பேசுவது போன்ற பஞ்ச் வசனங்கள், சிறுவா்களுடன் சந்திப்பு என பல சுவாரஸ்ய பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சி தொடர்பாக பியர் கிரில்ஸ் இன்று இரண்டு ட்வீட்களை வெளியிட்டுள்ளர். நடிகர் ரஜினிகாந்தின் ப்ளாக்பஸ்டர் டிவி நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகி வருகிறேன். நான் நிறைய நட்சத்திரங்களுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். ஆனால் இது எனக்கு சிறப்புமிக்க ஒன்று. இந்தியாவை நேசிக்கிறேன். #ThalaivaOnDiscovery என்று பதிவிட்டுள்ளார். அத்துடன் மற்றொரு ட்வீட்டில், ரஜினிகாந்த் எப்போதுமே ஓர் அதிரவைக்கும் நட்சத்திரமாக இருந்துள்ளார்.

ஆனால் கானகம் வேறு... அவரைப் போன்ற ஒரு பிரபலத்துடன் நேரத்தை செலவழித்தது மகிழ்ச்சி. அவரை முழுவதுமாக வேறொரு பரிமாணத்தில் பார்த்தேன். பியர் கிரில்ஸுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை காண ஆவலாக உள்ளேன் எனவும் கூறியுள்ளார்.


Tags : Rajinikanth ,Pierre Grills MAN vs WILD show , Actor Rajinikanth, MAN vs WILD show, Pierre Grills
× RELATED அரசியல் கேள்விகளுக்கு பதில் அளிக்க ரஜினி மறுப்பு..!!