×

காளையார்கோவிலில் அடிப்படை வசதியில்லாத சமுதாய கூடம்

காளையார்கோவில்: காளையார்கோவில் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது முற்றிலும் சேதமடைந்த நிலையில் இயங்கி வருகின்றது. காளையார்கோவில் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் 20 ஆண்டுகளுக்கு முன் அன்றைய மக்கள் தொகைகு ஏற்ப கட்டப்பட்டது. தற்போது காளையார்கோவிலின் மக்கள் தொகை 20 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. அதற்கேற்ப சமுதாயகூட கட்டிடம், சமயல் அறை, மின்சார வசதி, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடம், போன்ற அடிப்படை வசதியும் எதுவும் இல்லை. கட்டிடத்தின் மேற்கூறை அவ்வப்போது பெயர்ந்து விழுந்து கொண்டே இருக்கின்றது. கட்டிடத்தின் ஒரு பகுதியில் சுவற்றின் மீது மரங்கள் செடிகள் வளர்ந்து சுவற்றில் விரிசல் ஏற்படுத்தி கொண்டு உள்ளது.

மேலும் குடிநீர் தொட்டியை சுற்றிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. சமுதாய கூடத்திற்கு தண்ணீர் வசதி இருந்தும் வால்வுகளை பராமரிக்காமல் வீணடிக்கப்பட்டு தண்ணீர் ஏற்றுவது தடைபட்டு விட்டது. சுப நிகழ்ச்சி வைக்கும் பொதுமக்கள் தனியாரிடம் தண்ணீர் வாங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. சமுதாய கூடத்தில் திறந்த வெளியில் உள்ள சமயல் அறையில் அடுப்படி வசதிகள் இல்லாததால் தரைகளில் குழிகள் தோண்டப்பட்டு அவற்றில் சமைத்து வருகின்றார்கள். இவ்வாறு தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் விடுவதினால் முட்புதர்கள் முளைத்து விடுகின்றன.

அவற்றில் தான் விஷேச காலங்களில் மீண்டும் சமைத்து கொள்ள வேண்டும் விஷேச காலங்கள் முடிந்த பின்பு சமயல் அறையை முறையான பராமரிப்பு இல்லாமல் எப்பொழுதும் திறந்தே கிடப்பதினால் இரவு மற்றும் பகல் நேரங்களில் பாராக நடைபெறுகின்றது. கழிப்பறை மற்றும் மணமக்கள் அறை பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகின்றது. இவ்வாறு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத சமுதாய கூடத்தில் அரசு துறை, பல்வேறு சங்கங்கள், கட்சி கூட்டம், சுபநிகழ்ச்சிகள் மற்றும் ஊராட்சி மன்ற  சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு என்று இந்த சமுதாய கூடத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். காளையார்கோவில் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags : Community Center ,Kaliyarikovil ,Basic Community Center Kaliyarikovil , Kaliyar temple, infrastructure, community hall
× RELATED ரூ.20 லட்சத்தில் சமுதாயக்கூடம் எம்எல்ஏ தலைமையில் பூமிபூஜை