×

குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு வலுக்கும் எதிர்ப்புகள் : தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு இஸ்லாமியர்கள் போராட்டம்

சென்னை :  குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். கடலூரில் அண்ணா மேம்பாலத்தில் திரண்ட 10,000த்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

அவர்களை பாரதி சாலையில் தடுத்தி நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் முற்றுகையிட முயன்றனர்.உலக தமிழ் சங்கத்தில் இருந்து பேரணியாக சென்ற அவர்களை நீச்சல் குளம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   

திருச்சியில் அனைத்து இஸலாமிய கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இஸ்லாமிய அமைப்புகள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.போராட்டம் காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் வழக்கமான பணிகளுக்காக ஆட்சியர் அலுவலகங்களுக்கு வருபவர்கள் கூட சோதனைக்கு உள்ளானார்கள். போராட்டம் காரணமாக திருச்சி, கரூர், கடலூர் போன்ற இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.


Tags : Tamil Nadu ,Tamil Nadu Citizenship Law: Islamists Struggle to Block District Offices , Islamists, struggle, citizenship law, blockade
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...